தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அதிக விலைக்கு கரும்பு வாங்க சர்க்கரை ஆலைகள் போட்டி

அதிக விலைக்கு கரும்பு வாங்க சர்க்கரை ஆலைகள் போட்டி

அதிக விலைக்கு கரும்பு வாங்க சர்க்கரை ஆலைகள் போட்டி


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கடந்த வாரம் டன் கரும்புக்கு, அரசு நிர்ணயித்த 3,600 ரூபாயை தர தயங்கிய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், இப்போது இதை விட அதிகமான தொகை கொடுத்து, கரும்பு கொள்முதல் செய்ய போட்டி போடுகின்றனர்.

கர்நாடகாவின் கரும்பு விவசாயிகள், டன் கரும்புக்கு 4,600 ரூபாய் நிர்ணயிக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர். குறிப்பாக பெலகாவியில் தொடர் போராட்டம் நடந்தது. கரும்பு விவசாயிகள் நெடுஞ்சாலை மறியல், சிறை நிரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெலகாவியில் மட்டும் டன் கரும்புக்கு 3,600 ரூபாய் நிர்ணயித்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உத்தரவிட்டார். இந்த தொகையை தர, சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் தயங்கினர்.

ஆனால் இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. சர்க்கரை ஆலைகள் 4,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொடுத்து, கரும்பு வாங்க போட்டி போடுகின்றனர். இதற்கு காரணம், கரும்பு பற்றாக்குறை.

கர்நாடகாவில், 20 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 45 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் எல்லையில். 14 லட்சம் ஏக்கரில் கரும்பு விளைகிறது. இம்முறை மழை பற்றாக்குறையால், விளைச்சல் பாதிக்கப்பட்டது. கரும்பு உற்பத்தி 45 சதவீதம் குறைந்துள்ளது.

எனவே, கரும்பு வாங்க, சர்க்கரை ஆலைகள் நான் நீ என, போட்டி போடுகின்றன. குறிப்பாக கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லை பகுதியில், கரும்பு வாங்க அதிகம் போட்டி எழுந்துள்ளது.

மஹாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள், டன் கரும்புக்கு, 4,200 ரூபாய் விலை அறிவித்துள்ளன. இதனால், கர்நாடகாவின் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us