தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தீமை செய்யாமல் இருந்தாலே போதும் முதல்வருக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

தீமை செய்யாமல் இருந்தாலே போதும் முதல்வருக்கு மத்திய அமைச்சர் அறிவுரை

தீமை செய்யாமல் இருந்தாலே போதும் முதல்வருக்கு மத்திய அமைச்சர் அறிவுரை


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துமகூரு: ''முதல்வர் நல்லது செய்ய வேண்டாம்; தீமை செய்யாமல் இருந்தாலே போதும்,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

துமகூரு மாவட்டம், குப்பி தாலுகாவின் துருவகெரே சட்டசபை தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய பவனில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வெண்கல சிலையை, மத்திய அமைச்சர் குமாரசாமி நேற்று திறந்து வைத்தார்.

பின், அவர் பேசியதாவது:

முதல்வர் சிவகுமார், எனக்கு எந்த தீங்கும் விளைவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும், அவரது கட்சி தொண்டர்களை துாண்டி விட்டு, என் வீடு முன் நோட்டீஸ்களை ஒட்ட வைக்கிறார். தொட்டஅலஹள்ளியில் முகாமிட்டிருந்த காலத்தில் இருந்தே அவருக்கு இந்த பழக்கம் உள்ளது. முதல்வரான பிறகும் நிறுத்தவில்லை.

சமீபத்தில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு, பெங்களூரில் என் வீட்டின் அருகிலும் நோட்டீஸ் ஒட்டி, தரம் தாழ்ந்த அரசியல் செய்துள்ளனர். இது தான் முதல்வரின் வேலையா... அவர் நல்லது செய்ய வேண்டாம்; தீமை செய்யாமல் இருந்தாலே போதும்.

முதல்வர் சிவகுமார் மீது எனக்கு பொறாமையோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. எனினும், கொள்ளை அடிக்கும் நபர்களுடன் எப்படி ஒத்துழைக்க முடியும்...

'நாங்கள் தேவகவுடாவை பிரதமராக்கினோம்' என, காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது பொய். தன் சுயமரியாதைக்கும், நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, 11 மாதங்களில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

நான் முதல்வராக இருந்தபோது, எந்த ஒப்பந்ததாரரிடம் இருந்தும் கமிஷன் பெறவில்லை. ஒவ்வொரு மாதமும், 3ம் தேதி அவர்களுக்கு உரிய பணம் வழங்கப்பட்டது. தற்போதைய அரசு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய, 39 ஆயிரம் கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us