தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'அன்னபாக்யா' திட்டத்தில் சர்க்கரை, உப்பு, எண்ணெய்

 'அன்னபாக்யா' திட்டத்தில் சர்க்கரை, உப்பு, எண்ணெய்

 'அன்னபாக்யா' திட்டத்தில் சர்க்கரை, உப்பு, எண்ணெய்


ADDED : மார் 07, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவு மற்றும் பொது வினியோகம் l 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், 4.54 கோடி பயனாளிகளுக்கு, மாதந்தோறும் கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு இத்திட்டத்துக்காக, 17,367 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது வழங்கப்படும் கூடுதல் அரிசிக்கு பதிலாக சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய் அடங்கிய, 'இந்திரா உணவு கிட்' வழங்கப்படும். இதற்காக 2026 - 27ம் ஆண்டில், 6,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

l தற்போது செயல்படும், உணவு துறையின் சஹாயவாணி (1967) மையம், ஏ.ஐ., தொழில்நுட்ப அடிப்படையிலான, 'அன்னவாணி' யாக மாற்றப்படும்

l 'தாசோஹா' திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் 274 தொண்டு அமைப்புகளில் உள்ள, 32,059 பயனாளிகளுக்கு 14 கோடி ரூபாய் செலவில் உணவு வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இத்திட்டம், 34 தன்னார்வ அமைப்புகளில் உள்ள, 6,701 பயனாளிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us