எத்தனால் உற்பத்திக்கு அனுமதி கரும்பு விவசாயிகள் வரவேற்பு
எத்தனால் உற்பத்திக்கு அனுமதி கரும்பு விவசாயிகள் வரவேற்பு
ADDED : ஜூன் 19, 2026 01:15 AM

மைசூரு: ''கரும்பு மற்றும் விவசாய பொருட்களில் இருந்து, 'எத்தனால்' உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு அனுமதியால், விவசாயிகள் பயனடைவர்,'' என, மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபுர் சாந்தகுமார் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, எத்தனாலை பயன்படுத்தும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இது விவசாயிகள் பயிரிடும் கரும்பு, பிற விவசாய பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும். இது விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.
கடந்த 2006ல் மைசூரில் தென்னிந்திய விவசாயிகள் மாநாடு நடந்தது. இதில், கரும்பில் இருந்து எத்தனால் தயாரித்து பெட் ரோலுடன் கலக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் பெட்ரோல் இறக்குமதியை தவிர்த்து, அந்நிய செலாவணிய சேமிக்க முடியும் என்றும் தீர்மா னிக்கப்பட்டது.
அதன்படி, 20 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், 22 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி சேமிக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறி உள்ளார். கரும்பு, மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு இது பயனளிக்கும்.
விவசாயிகள், தங்கள் வயல்களில் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம், விவசாயிகளுக்கு கூடுதலாக பலன் கிடைக்கும். பிரேசிலில் எத்தனால் தயாரிக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எத்தனா ல் ஒரு லிட்டர் 64 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. 1 டன் கரும்பில் இருந்து, எத்தனால் உற்பத்தி செய்தால், 6,500 ரூபாய் லாபம் கிடைக்கும். எத்தனால் உற்பத்தி மூலம், விவசாயிகளின் கரும்பு செலவு நிலுவை பிரச்னைகள் தீர்க்கப்படும். மாநிலத்தில், 83 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவை அதிக எத்தனாலை உற்பத்தி செய்ய வேண்டும். இது தொடர்பாக, முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
