/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புற்றுநோயால் விரக்தி ஏட்டு தற்கொலை
/
புற்றுநோயால் விரக்தி ஏட்டு தற்கொலை
ADDED : ஜூலை 17, 2025 10:59 PM

ஹாசன்: புற்றுநோயால் மனம் நொந்த தலைமை ஏட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹாசன் மாவட்டம், அரகலகூடு தாலுகாவின், சிக்கபொம்மனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் நடேஷ், 38. இவர் அரகலகூடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார். மூன்று மாதங்களுக்கு முன்பு, இவருக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
பெங்களூரின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரமாக ஹாசன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே ஒரு மாதத்துக்கு முன், தலைமை ஏட்டாக பதவி உயர்வு பெற்று, ஹொளேநரசிபுராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததார். சிகிச்சையில் இருந்ததால், அவரால் பணியில் சேர முடியவில்லை.
ஹாசன் மருத்துவமனையில் இருந்த அவர், நேற்று முன்தினம் திடீரென மாயமானார். கலக்கமடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை சுற்றுப்பகுதிகளில் தேடி வந்தனர். இதுகுறித்து, அரகலகூடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் தேட துவங்கினர்.
ஹாசன் புறநகரின், கென்டேகட்டே வனப்பகுதி அருகில், துாக்கிட்ட நிலையில் நடேஷ், நேற்று காலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். புற்றுநோயால் மனம் நொந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

