தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பாஷ்யம்நகர் முருகன் கோவிலில் வரும் 24ல் சுமங்கலி பூஜை

 பாஷ்யம்நகர் முருகன் கோவிலில் வரும் 24ல் சுமங்கலி பூஜை

 பாஷ்யம்நகர் முருகன் கோவிலில் வரும் 24ல் சுமங்கலி பூஜை


ADDED : ஜூலை 21, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீராமபுரம்: பாஷ்யம்நகர் முருகன் கோவிலில், நாளை மறுதினம் சுமங்கலி பூஜை நடக்கிறது.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் பாஷ்யம்நகரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கேட்ட வரம் கொடுக்கும் அன்னையாகவும், வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்கும் அம்மனாகவும் ஸ்ரீதுர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நடக்கும், ராகு கால பூஜை மிகவும் சி றப்பு வாய்ந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் பெறுகின்றனர். இந்நிலையில் ராகு கால பூஜை பக்தர்கள் சார்பில், நாளை மறுதினம் காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. ராகு கால பூஜை பக்தாதிகள் இணைந்து சுமங்கலி பூஜை நடத்துகின்றனர். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தீர்க்க சுமங்கலித்துவம், திருமண பேறு, குழந்தை பாக்கியம் ஆகியவைகளுக்காக துர்க்கையை வேண்டி பெண்கள் பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ, திருமாங்கல்ய கயிறு, ஒரு ரூபாய் நாணயம், மெஹந்தி கோன், பிரசாதம் அடங்கிய மங்கல பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது.

பூஜை ஏற்பாடுகளை, ராகு கால பூஜை குழுவின் உஷா, பத்மா, ராஜேஸ்வரி, சாந்தி, லட்சுமி, தேவிகா, மேகலா, மகேஸ்வரி, ஜெயந்தி, சம்பத்தம்மாள், மீரா மற்றும் பலர் செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us