/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிராமப்புற மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்
/
கிராமப்புற மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்
ADDED : ஏப் 15, 2025 05:04 AM

பெங்களூரு: ''கிராமப்புற மாணவர்களுக்காக கோடைகால பயிற்சி முகாம் துவங்கி உள்ளது. மே மாதம் இறுதி வரை நடக்கும்,'' என கிராம மேம்பாட்டு பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கிராமப்புற மாணவர்களுக்காக கோடை கால பயிற்சி முகாம், கிராம பஞ்சாயத்து விழிப்புணர்வு மையத்தில் துவங்கி உள்ளது. இந்த முகாம் மே மாதம் இறுதி வரை நடக்கும்; குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது.
பயிற்சி முகாமில் எழுத்து, அறிவியல், வானவிலை உருவாக்கம், விளையாட்டு, கணிதம், கிராமப்புறங்களில் விளையாடும் காகித விசிறி, ஜெட் விமானம், கண் சிமிட்டும் பொம்மை, சதுரங்கம், கேரம் உட்பட பல்வேறு பயிற்சி அளிக்கப்படும்.
அவரவர் கிராமங்களில் உள்ள பறவைகள் குறித்த தகவல்கள், தண்ணீர் வழித்தடம், எனது கிராமம், எனது கிராமத்தின் வரலாறு, எங்கள் கிராம திருவிழா, எங்கள் கிராம நாட்டுப்புற பாடல்கள், கதைகள், எங்கள் கிராம விளையாட்டு, எங்கள் கிராம கலை போன்றவை மாணவர்களுக்கு கற்றுத்தப்படும்.
தபால் நிலையங்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி, வங்கி, கால்நடை மருத்துவமனை, அங்கன்வாடி மையம், கிராம பஞ்சாயத்து, மருத்துவமனைகள் உட்பட பல இடங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.