ADDED : செப் 01, 2026 03:14 AM

அ நிறம் | அளவு
மாண்டியா: மாண்டியா சிறையில் விசாரணை கைதிக்கு ராஜ உபசாரம் நடப்பதாக, அங்குள்ள சில விசாரணை கைதிகள், சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமாருக்கு புகார் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து, சிறையில் மாவட்ட நீதிபதி சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
நீதிமன்ற முன்னறிவிப்பின்றி, கைதி ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து, கண்டித்தார்.
இதையடுத்து டி.ஜி.பி., அ லோக்குமார், விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில், கைதிக்கு சலுகை காண்பித்தது உறுதியானது.
இதனால் சாந்தம்மா, பல்லாரி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
