sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கர்நாடகா முழுதும் கம்பாலா  உச்ச நீதிமன்றம் அனுமதி

/

 கர்நாடகா முழுதும் கம்பாலா  உச்ச நீதிமன்றம் அனுமதி

 கர்நாடகா முழுதும் கம்பாலா  உச்ச நீதிமன்றம் அனுமதி

 கர்நாடகா முழுதும் கம்பாலா  உச்ச நீதிமன்றம் அனுமதி


ADDED : மார் 11, 2026 05:58 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போன்று, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கம்பாலா போட்டி நடத்தப்படுகிறது. சேறு, சகதி நிறைந்த பாதையில் ஒரு ஜோடி எருதுகளுடன் குறிப்பிட்ட துாரத்தை கடக்கும் வீரர் வெற்றியா ளராக அறிவிக்கப்படுகிறார்.

தட்சிண கன்னடா, உடுப்பியில் மட்டுமே நடந்த கம்பாலா போட்டிகள், 2023 ம் ஆண்டு முதல்முறையாக பெங்களூரிலும் நடந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 2024 ம் ஆண்டும் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கம்பாலா போட்டிகள் தொடர்பாக மாநில அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 'தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனை மீறி பெங்களூரு, ஷிவமொக்காவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 300 கி.மீ., துாரம் லாரிகளில் பயணித்து வரும் எருதுகள் நேரடியாக போட்டியில் இறக்கி விடப்படுகின்றன. இது அவைகளை கொடுமைப்படுத்துவது போன்றது' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வந்தது. நேற்று நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், 'கம்பாலா போட்டிகளை குறிப்பிட்ட மாவட்டத்திற்கு என்று மட்டும் ஏன் மட்டுப்படுத்த வேண்டும்.

'வீர விளையாட்டான கம்பாலாவை மாநிலம் முழுதும் நடத்தினால் என்ன தவறு. மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கம்பாலா பற்றி தெரிந்து கொள்ளட்டும்' என்று கூறி, பீட்டா மனுவை தள்ளுபடி செய்தனர்.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us