தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஹனி டிராப்' மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது

 'ஹனி டிராப்' மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது

 'ஹனி டிராப்' மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது


ADDED : மார் 11, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: ஹனி டிராப் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றி, பணம் பறித்து வந்த பெண் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாகல்கோட் மாவட்டம் மஹாலிங்கபுராவை சேர்ந்தவர் தீபா அவடகி, 33. 'பேஷன் டிசைனர்' என்று கூறிக்கொண்டு, முகநுால், இன்ஸ்டாகிராமில் பணக்காரர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வார்.

பின், அவர்களை குறிப்பிட்ட லாட்ஜுக்கு வரவழைப்பார். அங்கு வந்ததும், தொழிலதிபரை மிரட்டி, அவரிடம் இருந்து பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு சென்றுவிடுவார்.

இவ்வாறு சமீபத்தில் ஒரு தொழிலதிபரை லாட்ஜுக்கு வரவழைத்து மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக, அந்நபர் போலீசில் புகார் செய்தார்.

விசாரணை நடத்திய போலீசார், தீபாவை கைது செய்தனர். இவருக்கு, ஹுக்கேரி தாலுகாவை சேர்ந்த சிவானந்த் மதபதி உதவி வந்தார். கிடைக்கும் பணத்தை இருவரும் பிரித்து கொள்வர்.

தீபா மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவாகி உள்ளன. இவரிடம் இருந்து 32.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்கள், 11 மொபைல் போன்கள், டேப்கள், 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவான சிவானந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us