/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் சிவானந்த பாட்டீலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் 'டோஸ்'
/
அமைச்சர் சிவானந்த பாட்டீலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் 'டோஸ்'
அமைச்சர் சிவானந்த பாட்டீலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் 'டோஸ்'
அமைச்சர் சிவானந்த பாட்டீலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் 'டோஸ்'
ADDED : ஆக 05, 2025 07:11 AM

எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது, ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தொடர்ந்த மானநஷ்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 20-24 லோக்சபா தேர்தலின்போது நடந்த பா.ஜ., பேரணியில், ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பாட்டீலை, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இதனால் அவர், தன் கவுரவம் பாழானதாக கோபம் அடைந்தார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில், எத்னால் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு சட்டப்படி இல்லை என, கருத்து தெரிவித்து தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் மனுத் தாக் கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 'உங்கள் அரசியல் போராட்டத்தை, நீதிமன்றத்தின் வெளியே வைத்துக் கொள்ளுங்கள்.
நீதிமன்றத்துக்குள் ஏன் அரசியலை கொண்டு வருகிறீர்கள்? அபராதத்துடன் இந்த மனுவை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது, மனுதாரர் அமைச்சர் தானே. அவருக்கு ஏன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கக் கூடாது?' என, அதிருப்தியுடன் கேள்வி எழுப்பினார்.
இதனால், தர்ம சங்கடத்துக்கு ஆளான சிவானந்த பாட்டீலின் வக்கீல், மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார்.
- நமது நிருபர் -