/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்ஷனுக்கு ஜாமின் உச்ச நீதிமன்றம் அதிருப்தி
/
தர்ஷனுக்கு ஜாமின் உச்ச நீதிமன்றம் அதிருப்தி
ADDED : ஜூலை 17, 2025 11:02 PM
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கியதற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் மீது, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதி பர்திவாலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தர்ஷன் தரப்பு வக்கீல் கபில் சிபிலை பார்த்து, நீதிபதி பர்திவாலா கூறுகையில், ''நேர்மையாக சொல்ல வேண்டுமானால், கர்நாடக உயர் நீதிமன்றத்திம், தன் உரிமையை பயன்படுத்திய விதம், எங்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. உங்கள் மனுதாரர் ஜாமினில் இருப்பதால், உங்கள் தரப்பு வாதங்களை கேட்கிறோம்,'' என கூறி, வழக்கு விசாரணையை, ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
- நமது நிருபர் -.