காஸ் கட்டுப்பாட்டால் கூடுதல் கட்டணம்: ஹோட்டல் உரிமையாளருக்கு கண்டனம்
காஸ் கட்டுப்பாட்டால் கூடுதல் கட்டணம்: ஹோட்டல் உரிமையாளருக்கு கண்டனம்
ADDED : மார் 13, 2026 06:01 AM

பெங்களூரு: மேற்காசிய பிராந்தியத்தில் நடக்கும் போரின் விளைவாக, பெங்களூரில் சமையல் கா ஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி, ஹோட்டல் ஒன்றில் கூடுதல் தொகை வசூலிப்பது, தெரிய வந்துள்ளது.
பெங்களூரின் பி.ஜி., ஒன்றில் தங்கியிருக்கும் நபர், நேற்று முன்தினம் இங்கு சிற்றுண்டி கிடைக்காததால், மிஸ்டர் ஆந்திரா மீல்ஸ் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். தேவையான சிற்றுண்டி ஆர்டர் செய்து சாப்பிட்டார். அதன்பின், ஹோட்டல் உரிமையாளர் கொடுத்த பில்லை பார்த்த போது, அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.
சிற்றுண்டி விலையுடன், காஸ் சப்ளைக்கு என கூடுதலாக, 30 ரூபாய் போடப்பட்டிருந்தது. இதைக்கண்டு வருத்தம் அடைந்த நபர், பில்லை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பெங்களூரு நகர் போலீசாருக்கும் அனுப்பி வைத்தார்.
இந்த பில் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பலரும் ஹோட்டல் உரிமையாளரை கண்டித்துள்ளனர். இது, பகல் கொள்ளை. காஸ் பற்றாக்குறையை காரணம் காட்டி, வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை வசூலிப்பது சரியல்ல. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
