/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பாமுல்' இயக்குநராக சுரேஷ் தேர்வு? கே.எம்.எப்.,பை கைப்பற்ற திட்டம்!
/
'பாமுல்' இயக்குநராக சுரேஷ் தேர்வு? கே.எம்.எப்.,பை கைப்பற்ற திட்டம்!
'பாமுல்' இயக்குநராக சுரேஷ் தேர்வு? கே.எம்.எப்.,பை கைப்பற்ற திட்டம்!
'பாமுல்' இயக்குநராக சுரேஷ் தேர்வு? கே.எம்.எப்.,பை கைப்பற்ற திட்டம்!
ADDED : மே 20, 2025 12:15 AM

ராம்நகர்: கனகபுரா தொகுதியில் இருந்து, 'பாமுல்' இயக்குநராக, துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்புக்கு உட்பட்ட, 'பாமுல்' எனும் பெங்களூரு பால் கூட்டமைப்பின் இயக்குநர் பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதில் கனகபுரா தொகுதியில் இருந்து பாமுல் இயக்குநர் பதவிக்கு, காங்கிரஸ் சார்பில் துணை முதல்வர் சிவகுமார் தம்பியும், பெங்களூரு ரூரல் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ்; பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக சந்திரம்மா கெம்பேகவுடா வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் 5 பேர் சுயேச்சையாக வேட்புமனு செய்தனர்.
இந்நிலையில் சந்திரம்மா உட்பட 6 பேரின் வேட்புமனுக்களின், சரியாக தகவல் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாமுல் இயக்குநராக சுரேஷ் போட்டியின்றி தேர்வாக உள்ளார். அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. எம்.பி.,யாக பதவி வகித்த சுரேஷ், பாமுல் இயக்குநர் பதவிக்கு போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
கூட்டுறவு துறை
இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கணக்கு உள்ளது. லோக்சபா தேர்தலில் தோற்றதன் மூலம் செல்வாக்கை இழந்த சுரேஷ், தற்போது எந்த பதவியும் இல்லாமல் இருக்கிறார். இதனால் வலுவான பதவிக்கு அடிபோடுகிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள, கே.எம்.எப்., தலைவர் பதவியை கைப்பற்ற நினைக்கிறார்.
தலைவர் பதவிக்கு போட்டியிட ஏதாவது ஒரு சங்கத்தில் இயக்குநராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாமுலில் சுரேஷ் போட்டியிட்டு உள்ளார்.
கே.எம்.எப்.,பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் குடும்பம் பல ஆண்டுகளாக கோலோச்சுகிறது. அவர்களிடம் இருந்து அதிகாரத்தை பறிக்க சிவகுமார், சுரேஷ் நினைக்கின்றனர். கே.எம்.எப்., கர்நாடக அரசின் கூட்டுறவு துறைக்கு கீழ் வருகிறது. அந்த துறை அமைச்சர் ராஜண்ணாவும், சிவகுமாரும் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர்.
பல மாற்றம்
தற்போதைய கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக், ராஜண்ணா, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளராக உள்ளார். ராஜண்ணாவுக்கு 'செக்' வைக்கும் முயற்சியாக, சுரேஷை கே.எம்.எப்., தலைவராக்க பார்க்கிறார் சிவகுமார்.
ஆனால் தற்போதைய தலைவர் பீமா நாயக்கிற்கு பதவியை விட்டுதர மனம் இல்லை. பதவிக்காக சித்தராமையாவிடம் கெஞ்ச ஆரம்பித்து உள்ளார்.
'திருப்பதி கோவிலுக்கு நந்தினி நெய் மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தேன். கே.எம்.எப்.,பில் பல மாற்றம் செய்து உள்ளேன். இதனால் தலைவராக தொடர எனக்கே வாய்ப்பு கொடுங்கள்' என கேட்டு வருகிறார்.