தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முதல்வர் பதவி பற்றிய பேச்சு அர்த்தமற்றது என்கிறார் சுரேஷ்

முதல்வர் பதவி பற்றிய பேச்சு அர்த்தமற்றது என்கிறார் சுரேஷ்

முதல்வர் பதவி பற்றிய பேச்சு அர்த்தமற்றது என்கிறார் சுரேஷ்


ADDED : ஜூலை 12, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கட்சிக்கு நேர்மையானவர். மேலிட தலைவர்களுக்கு மதிப்பு கொடுப்பவர். இவர் தன் சக்தியை காட்ட வேண்டிய அவசியம் இல்லை,'' என, அவரது தம்பியும், காங்., முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநில தலைவர் பதவியில் உள்ள சிவகுமார், மற்றவருக்கு முன் மாதிரியாக இருப்பவர். அதன்படியே பணியாற்றுகிறார்.

அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள மடாதிபதிகள், சிவகுமார் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்கின்றனர்.

மடாதிபதிகளிடம் அந்தந்த பகுதி மக்கள், யார் முதல்வராக வேண்டும் என, கேட்பதும், அதற்கு அவர்கள் பதில் அளிப்பதும் இது அரசியலில் தவிர்க்க முடியாது. கருத்து தெரிவிப்பதை தவறு என, கூற முடியாது. அரசியலில் ஓய்வு என்பது கிடையாது.

அவரவர் நலனுக்காக கருத்து தெரிவிப்பர். தற்போது சித்தராமையா முதல்வராக இருக்கிறார்.

முதல்வர் பதவி காலியாக இல்லாத நிலையில், அது பற்றி பேசுவது அர்த்தம் அற்றது.

காங்கிரசில் அரசியல் ரீதியில் எந்த மனஸ்தாபமும் இல்லை. முதல்வர் பதவி குறித்து, மேலிட தலைவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளனர். சிவகுமாருக்கு முதல்வராக வேண்டும் என, அவசரமும் இல்லை.

பதவி கை நழுவும் என்ற பீதியும் இல்லை. கட்சி பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறார்.

கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர், தன் கட்சியின் லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது. அவர்களின் நடவடிக்கை மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

காங்கிரசில் நாற்காலி சண்டை நடக்கவில்லை. சித்தராமையா முதல்வராக நீடிப்பார் என, தெளிவுபடுத்திய பின்னரும், ஊடகங்களுக்கு ஏன் குழப்பம் ஏற்படுகிறது என, தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us