தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சரவையில் பெண்கள் 'மிஸ்சிங்' நானே காரணம் என்கிறார் சுர்ஜேவாலா 

 அமைச்சரவையில் பெண்கள் 'மிஸ்சிங்' நானே காரணம் என்கிறார் சுர்ஜேவாலா 

 அமைச்சரவையில் பெண்கள் 'மிஸ்சிங்' நானே காரணம் என்கிறார் சுர்ஜேவாலா 


ADDED : செப் 17, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 03:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அமைச்சரவையில் பெண் உறுப்பினர் இடம் பெறாததற்கு நானே காரணம்,'' என, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா விளக்கம் அளித்து உள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

யு.பி.ஐ., எனும் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களை பயன்படுத்தும் பயனாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

இது, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 'வந்தே மாதரம்' பாடல் விவகாரத்தில் மத்திய அரசின் உத்த ரவுகளையே மாநில அரசு பின்பற்றுகிறது.

பிரதமர், ஜனாதிபதி, கவர்னர் பங்கேற்கும் நிகழ்வுகளில், வந்தே மாதரம் முழுமையாக பாடப்படும். எனவே, வந்தே மாதரம் பாடப்படாது என முழுமையாக யாரும் கூறவில்லை .

அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. பைரதி சுரேஷ், ஜமீர் அகமது கான், வீரேந்திர பப்பி, பரமேஸ்வர், சிவகுமார், டி.கே.சுரேஷ், பரத் ரெட்டி, நாகேந்திரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்தி இருக்கிறது.

அதே சமயம், குமாரசாமி, ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பா, ரேணுகாச்சாரியா போன்ற பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் வீடுகளில் இதுவரை சோதனை நடக்கவில் லை.

அமைச்சரவையில் பெண் உ றுப்பினர் இல்லாததற்கு நான் தான் காரணம். இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் தவறிழைக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு ஏராளமான பெண் உறுப்பினர்கள் இருப்பதால், யாரெனும் ஒருவரை தேர்வு செய்ய முடியவில்லை. இது என்னுடைய தவறே.

இருப்பினும், பெண் உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து, விரைவில் முடிவு செய்வோம். பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் காங்கிரஸ் அரசு தீவிரமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us