'பிரிஜ்' வெடித்து பயங்கர தீ விபத்து பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு
'பிரிஜ்' வெடித்து பயங்கர தீ விபத்து பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு
ADDED : செப் 17, 2026 03:15 AM

பெலகாவி: பெலகாவி பிரிஜ் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில், சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்ததால், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
பெலகாவி மாவட்டம், சாவத்தஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கஜானன் தாமோன், 65. இவரது வீட்டில் கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட மின்கசிவில், 'பிரிஜ்' வெடித்து சிதறி, தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கஜானனின் மனைவி சாரதா, 45, சாரதாவின் மகள்கள் கங்கா, 25, பிரியா, 24, சாரதாவின் அக்கா பாரதி ராஜாராம், 50, என நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கஜானன், அவரது மகன் ரோஷன், 21, கடும் தீக்காயங்களுடன் படுகாயமடைந்து, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பல னின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இதன் மூலம், பிரிஜ் வெடிப்பு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந் துள்ளது.
