/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடவுளிடம் சர்வே ஊழியர்கள் குளறுபடி
/
கடவுளிடம் சர்வே ஊழியர்கள் குளறுபடி
ADDED : அக் 08, 2025 09:06 AM
பெங்களூரு : ஜாதி வாரி சர்வே நடத்தும் ஊழியர்கள், கோவில் சுவரிலும் ஸ்டிக்கர் ஒட்டி, குளறுபடி செய்துள்ளனர்.
மாநிலத்தில் ஜாதிவாரி சர்வே, மும்முரமாக நடந்து வருகிறது. பெங்களூரிலும் கூட, வீடு வீடாக சர்வே நடத்துகின்றனர். சர்வே நடக்கும் வீடுகளின் சுவர்கள், கதவுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
பெங்களூரின், எஸ்.பி., சாலையில் வரதாஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. சர்வே ஊழியர்கள், இந்த கோவிலுக்கும் ஜாதிவாரி சர்வே தொடர்பான ஸ்டிக்கரை ஒட்டி குளறுபடி செய்துள்ளனர்.
கோவில் அர்ச்சகர், ஸ்டிக்கரை பார்த்து அதிருப்தி தெரிவித்துள்ளார். 'கோவிலில் ஸ்டிக்கர் ஒட்டியது, ஊழியர்களின் அலட்சியத்தை காட்டுகிறது. இவர்கள் கடவுளிடமும் சர்வே செய்ய முற்பட்டுள்ளதாக தோன்றுகிறது' என்றார்.