/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேல்சபை துணை செயலர் 'சஸ்பெண்ட்' தள்ளுபடி
/
மேல்சபை துணை செயலர் 'சஸ்பெண்ட்' தள்ளுபடி
ADDED : ஆக 20, 2025 07:54 AM
பெங்களூரு : கர்நாடக மேல்சபையில் அரசியலமைப்பு தினம் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது, அங்கு அம்பேத்கர் படம் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, மேல்சபை துணை செயலர் ஜலஜாக்சியை அழைத்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, 'இனி இதுபோன்று அலட்சியமாக இருக்கக் கூடாது' என கூறி எச்சரித்து அனுப்பினார்.
ஆனால், இந்தாண்டு ஜூலை 3ம் தேதி, சில அமைப்புகள் புகார் எழுப்பியதை அடுத்து, மறுநாள் 4ம் தேதி ஜலஜாக்சி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி நாகேந்திர பிரசாத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகேந்திர பிரசாத், ''மனுதாரர் ஜலஜாக்சி மீதான குற்றச்சாட்டை மேலோட்டமாக பார்க்கும்போது, இடைநீக்கத்துக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. இதில் துறை ரீதியாக விசாரணை நடத்தினாலே போதும். எனவே, அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.