/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.வி.சி.கே., பள்ளி ஆசிரியர் தின விழா
/
எஸ்.வி.சி.கே., பள்ளி ஆசிரியர் தின விழா
ADDED : செப் 07, 2025 10:53 PM

தியாகராய நகர் : எஸ்.வி.சி.கே., பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பெங்களூரு தியாகராய நகரில் உள்ள எஸ்.வி.சி.கே., எனும் ஸ்ரீவெங்கடேஸ்வரா செந்தில் குமரன் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளியின் தலைவர் லட்சுமிபதி, துணைத்தலைவர் லீலா, இயக்குநர் பாக்யலட்சுமி, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தொழிலின் முக்கியத்துவம் குறித்தும்; ஆசிரியர் தொழில் புனிதமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் பலரும் பேசினர்.
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் நன்றி கூறி மரியாதை செய்தனர்.
ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்துவது போன்று மாணவர்கள் நாடகம் நடித்து காட்டினர். இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் மெய் மறந்து ரசித்தனர்.
ஆசிரியர் பொறுப்புக்கு வந்து, 55 ஆண்டுகள் ஆனதை ஒட்டி லட்சுமிபதி தம்பதி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.