UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 07:24 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: டேபிள் டென்னிஸ் போட்டியில் அர்னவ், தன்விதா, ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.
பெங்களூரு கப்பன் பார்க்கில் உள்ள கே.ஜி.எஸ்., கிளப்பில், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான, ஏழாவது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன.
நேற்று நடந்த ஆடவருக்கான இறுதி போட்டியில், சுசேத் தரன்னவரை 11 – 8; 11 – 7; 11 – 6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, அர்னவ் ஷர்வில் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்களுக்கான இறுதி போட்டியில் சக்தி சந்தோஷை 8 – 11; 14 – 16; 11 – 7; 11 – 5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து, தன்விதா ஆத்யா சாம்பியன் பட்டம் வென்றார்.
இருவருக்கும் பட்டம், பதக்கங்களை வழங்கி, பெங்களூரு நகர மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தினர் கவுரவித்தனர்.
