/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.எஸ்.டி.எல்., துாதர் பணி இன்று துவங்கும் தமன்னா
/
கே.எஸ்.டி.எல்., துாதர் பணி இன்று துவங்கும் தமன்னா
கே.எஸ்.டி.எல்., துாதர் பணி இன்று துவங்கும் தமன்னா
கே.எஸ்.டி.எல்., துாதர் பணி இன்று துவங்கும் தமன்னா
ADDED : பிப் 10, 2026 04:43 AM

மைசூரு: அரசு சார்ந்த கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்துக்கு துாதராக நியமிக்கப்பட்டிருந்த நடிகை தமன்னா, இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பணியை துவக்கவுள்ளார்.
இது தொடர்பாக, தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மைசூரில் நேற்று அளித்த பேட்டி:
கே.எஸ்.டி.எல்., தயாரிக்கும் பொருட்களுக்கு, மார்க்கெட்டிங் அதிகரிக்கும் நோக்கில். சில மாதங்களுக்கு முன் பன்மொழி நடிகை தமன்னா, துாதராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது பணி நாளை (இன்று) முதல் அதிகாரப்பூர்வமாக துவங்கவுள்ளது.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாயை, 2030ன் வேளையில் 5,000 கோடி ரூபாயாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம். உற்பத்தி பொருட்களை இளம் சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல, பிரசாரம் செய்வோம். இதற்காக சமூக வலைதளங்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடரும் நடிகை தமன்னாவின் இமேஜ் உதவும்.
கே.எஸ்.டி.எல்., நிறுவனத்துக்கு நுாற்றாண்டுக்கும் அதிகமான வரலாறு உள்ளது. இங்கு சந்தன சோப், லோஷன் உட்பட 57 உற்பத்தி பொருட்கள் தயாராகின்றன. இந்த உற்பத்தி பொருட்கள் குறித்து, நடிகை தமன்னா இரண்டு ஆண்டுகள், பிரசாரம் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.

