'தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு விடுதியில் இல்லை'
'தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரு விடுதியில் இல்லை'
ADDED : மே 09, 2026 11:57 PM

பெங்களூரு: ''தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூரில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்படவில்லை,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பெங்களூரில் உள்ள தனியார் விடுதிகளில், தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது, முற்றிலும் தவறான செய்தி. தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் பெங்களூரில் தங்க வைக்கப்படவில்லை.
இது தொடர்பாக கட்சி மேலிடம் என்னிடம் எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் பிரசாரம் செய்ய எனக்கு கட்சி தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தது. அதன் படியே, தமிழகம் சென்றேன். மற்றபடி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
எடியூரப்பா மக்கள் பணியில் பல சேவைகளை செய்தவர். அவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறில்லை. கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும். அவரது அரசியல் சித்தாந்தம் வேறு; என்னுடையது வேறு.
கேரளத்தில் யார் முதல்வர் என்பது குறித்து, கட்சி தலைவர்கள் ஆலோசிக்கின்றனர். விரைவில் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
