/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தோழியின் சகோதரர் கழுத்தை அறுத்த தமிழக வாலிபர் கைது
/
தோழியின் சகோதரர் கழுத்தை அறுத்த தமிழக வாலிபர் கைது
தோழியின் சகோதரர் கழுத்தை அறுத்த தமிழக வாலிபர் கைது
தோழியின் சகோதரர் கழுத்தை அறுத்த தமிழக வாலிபர் கைது
ADDED : ஜூலை 20, 2025 09:43 PM

ஹெச்.ஏ.எல் : தமிழகத்தின் திருப்பத்துாரை சேர்ந்தவர் செல்வ கார்த்திக், 30. இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பெங்களூரு ஹெச்.ஏ.எல்., பகுதியில் வசிக்கும், திருமணமான 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போனில் பேசினர்.
தனக்கு திருமணமானது பற்றி செல்வ கார்த்திக்கிடம், அந்த பெண் கூறி இருந்தார். ஆனாலும் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்து கொள்ளும்படியும், பெண்ணை வற்புறுத்தி உள்ளார்.
இதுபற்றி அந்த பெண் தனது தந்தை, சகோதரரிடம் கூறி உள்ளார். செல்வ கார்த்திக்கிடம் பேசிய பெண்ணின் தந்தை, பெங்களூரு வரும்படி கூறி உள்ளார். அதன்படி கடந்த 18ம் தேதி அவர், பெங்களூரு வந்து ஹெச்.ஏ.எல்., பகுதிக்கு சென்றார். பெண்ணின் தந்தையும், சகோதரர் பிரசாந்த்தும், செல்வ கார்த்திக்கிடம் பேசினர்.
அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் சமாதானம் அடைந்து உள்ளனர். பின், செல்வ கார்த்திக்கை பஸ் ஏற்றிவிட, பிரசாந்த் தனது பைக்கில் அழைத்து சென்றார்.
பைக்கில் செல்லும் போது இருவருக்கும் இடையில், மீண்டும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. செல்வ கார்த்திக் தான், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரசாந்த்தின் கழுத்தை அறுத்து உள்ளார்.
பைக்கில் இருந்து தவறி விழுந்த பிரசாந்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். செல்வ கார்த்திக்கை பிடித்து, ஹெச்.ஏ.எல்., போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார்; விசாரணை நடக்கிறது.