/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தட்சிண கன்னடா எஸ்.பி.,யாக தமிழர்
/
தட்சிண கன்னடா எஸ்.பி.,யாக தமிழர்
ADDED : மே 30, 2025 06:28 AM

மங்களூரு: தொடர் கொலைகள் நடப்பதை தடுப்பதற்காக, தட்சிண கன்னடா எஸ்.பி.,யாக தமிழ் அதிகாரி அருண் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கர்நாடகாவின் கடலோர பகுதியான தட்சிண கன்னடா மாவட்டத்தில், இரு சமூகத்தினர் இடையிலான மோதலால் வகுப்புவாத கொலைகள் நிகழ்கின்றன. இம்மாதம் 1ம் தேதி மங்களூரு பஜ்பே பகுதியில், பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பன்ட்வாலில் அப்துல் ரஹீம் என்பவர் கொலையானார். கல்விக்கு பெயர் போன தட்சிண கன்னடாவில், தொடர் கொலைகள் நடப்பது அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்ட எஸ்.பி., யத்தீஷ் செயல்பாடுகள் சரியில்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்று முதல்வருக்கு, சிலரிடம் இருந்து அழுத்தம் வந்தது.
இதையடுத்து தட்சிண கன்னடா மாவட்ட புதிய எஸ்.பி.,யாக தமிழ் அதிகாரி அருண் நேற்று மாலை நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு உடுப்பியில் அவர் எஸ்.பி.,யாக பதவி வகித்து வந்தார்.
அப்துல் ரஹீம் கொலையை தொடர்ந்து, தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சரான தினேஷ் குண்டுராவ் மீது, அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால் தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து, தன்னை விடுவிக்க வேண்டும் என்று சித்தராமையாவிடம், அவர் கோரிக்கை வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.