முஸ்லிம்களுக்கு காங்., கட்டாயம் அல்ல தன்வீர் செயிட் கருத்தால் சர்ச்சை
முஸ்லிம்களுக்கு காங்., கட்டாயம் அல்ல தன்வீர் செயிட் கருத்தால் சர்ச்சை
ADDED : ஏப் 17, 2026 04:52 AM

பெங்களூரு: தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின், காங்கிரசில் சூறாவளி ஏற்பட்டுள்ளது. கட்சி மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இடையே பனிப்போர் நிலவுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசுக்கு முஸ்லிம்கள் கட்டாயம் அல்ல. அதேபோன்று முஸ்லிம்களுக்கும், காங்கிரஸ் கட்டாயம் அல்ல. தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், கட்சிக்கு எதிராக செயல்பட்ட குற்றச்சாட்டின்படி, கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
யார் தவறு செய்தார்களோ, அவர்களை அழைத்து பேசுவது நல்லது. அதை விடுத்து கட்சியில் இருந்து நீக்குவது சரியல்ல. கடந்த, 2023ன் சட்டசபை தேர்தலில், சாமனுார் சிவசங்கரப்பா போட்டியிட்ட போது, தனக்கு பின் தாவணகெரே தெற்கு தொகுதியில், முஸ்லிம் சமுதாயத்தினருக்கே சீட் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
அவர் மறைவுக்கு பின், தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்த போது, அவர் ஏற்கனவே சொன்னபடி, சிறுபான்மையினருக்கு சீட் வழங்கும்படி கேட்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
