கட்டுமான திட்ட அனுமதி மூலம் ரூ.382 கோடி வருவாய் பெற இலக்கு
கட்டுமான திட்ட அனுமதி மூலம் ரூ.382 கோடி வருவாய் பெற இலக்கு
ADDED : மார் 29, 2026 03:24 AM
நிலம்கையகப்படுத்துதல் நகரின் முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக, 50.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
ஈஜிபுரா மேம்பால பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பனசங்கரி கோவில் வெளிவட்ட சாலை மற்றும் பேகூர் முதன்மை சாலை அகலப்படுத்துவதற்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நகர்ப்புற திட்டமிடல் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்குவதன் மூலம், 382 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட'பிரீமியர் பேர் பாலிசி' மூலம் 360 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும்.
ஒரு மனையில் கட்டடங்களை கட்ட அனுமதிப்பதன் மூலம் 175 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும்.
பொதுப்பணித்துறை ரூ.433 கோடி மதிப்பில், நகரில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடக்கின்றன. அனைத்து வார்டுகளிலும் அடிப்படை மேம்பாட்டு பணிகளுக்காக 162 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பனசங்கரி மெட்ரோ நிலையத்துக்கு அருகில்'ஸ்கை வால்க்' எனும் நடைமட்ட மேம்பாலம் அமைக்கப்படும். மேலும், பல பகுதிகளில் 18 நடைமட்ட மேம்பாலங்கள் அமைக்க முடிவு.
உலக வங்கி உதவியுடன், 28.50 கி.மீ., நீளத்துக்கு440 கோடி ரூபாய் மதிப்பிலானமழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
