sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

அறுசுவை பக்கம்: நொறுக்குகள்

/

அறுசுவை பக்கம்: நொறுக்குகள்

அறுசுவை பக்கம்: நொறுக்குகள்

அறுசுவை பக்கம்: நொறுக்குகள்


ADDED : செப் 05, 2025 11:10 PM

Google News

ADDED : செப் 05, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருப்பு வடை செய்யும் போது கடலை பருப்புடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து செய்யும் போது, வடையின் சுவை கூடும். புளியங்கொட்டையை வீணாக்காமல் அரைத்து பல் துலக்கி வந்தால் பற்கள் சுத்தமாக இருக்கும்.

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும்போது, வறுத்த நிலக்கடலையை சிறிதளவு பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். தக்காளி, வெங்காய சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.

பாஸ்மதி அரிசியை உதிரியாக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, வேக வைத்த இறாலை சேர்த்து 'எக் ரைஸ்' செய்தால் சுவையான இறால் எக் ரைஸ் கிடைக்கும். தேங்காய் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்தி கொள்ளலாம். குலாப்ஜாமூன் செய்யும் போது மீதமாகும் ஜீராவை, தயிரில் சேர்த்து சாப்பிட்டால் ருசியான லஸ்ஸி கிடைக்கும். சூடான சாதத்தில், ஒரு ஸ்பூன் ரசப்பொடி, சிறிதளவு நெய், சிட்டிகை உப்பு கலந்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகிவிடும். அரிசி உப்புமாவில் பச்சை மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக காய்ந்த மிளகாயை தாளித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கை சிறிது நேரம் உப்பு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு பின் வேக வைத்தால் சீக்கிரமாக வெந்துவிடும். நெத்திலி கருவாடு வறுவல் செய்வதற்கு முன், ஒரு பாத்திரத்தில் கருவாடை போட்டு சிறிது வெந்நீரை ஊற்றி, சிறிது நேரம் கழித்து அதை சுத்தம் செய்து பிறகு வறுவல் செய்தால் சுவையான கருவாடு கிடைக்கும்.

கீரையை வேகவிடும்போது, சிறிது நல்லெண ்ணெய் சேர்த்தால் கீரை ருசியா க இருக்கும். தோசைக்கு மாவு அரைக்கும்போது இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காயை சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சு போல மிருதுவாக இருக்கும். காராபூந்தி செய்தவுடன் உடனே டப்பாக்களில் போடாமல், சிறிது நேரம் கழித்து எடுத்து டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும். அப்போது, தான் நமத்து போகாமல் இருக்கும்

காலிபிளவர், கீரையை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.

இறாலை உரித்து கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை குறைந்து சுவையும் கூடுதலாக இருக்கும். பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும்.

குழம்பு வைக்கும்போது வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கிவிட்டு பின்னர் தக்காளியை சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும்

முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்

- நமது நிருபர் - .






      Dinamalar
      Follow us