அறுசுவை அறிவிப்பு கட்டுரை **** மிருதுவான துருக்கி ரோல்ஸ்
அறுசுவை அறிவிப்பு கட்டுரை **** மிருதுவான துருக்கி ரோல்ஸ்
ADDED : ஜன 03, 2026 07:02 AM

- நமது நிருபர் -:
துருக்கி ரோல்ஸ் செய்முறைக்கு பல வகைகள் உள்ளன. முக்கியமாக இனிப்பு வகைகளானதேங்காய் ரோல்ஸ் மற்றும் மலாய் ரோல்ஸ் பிரபலமாக உள்ளன. தேங்காய் ரோல்ஸ், தேங்காய், பால், சர்க்கரை கொண்டு செய்யப்படும். மலாய் ரோல்ஸ் மில்க் மால்ட், கஸ்டர்ட், க்ரீம், நட்ஸ்களை பயன்படுத்தி செய்யப்படும் மென்மையான இனிப்பு ஆகும்.
தேவையான பொருட்கள்
l மைதா மாவு -- 2 கப்
l பால் - அரை கப்
l வெதுவெதுப்பான நீர் -- முக்கால் கப்
l சர்க்கரை - அரை ஸ்பூன்
l ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
l உப்பு -- தேவையான அளவு
l வெண்ணெய் - 2 ஸ்பூன்
l நறுக்கிய மல்லி தழை - 2 ஸ்பூன்
l மிளகாய் துளிகள் - 1 ஸ்பூன்
செய்முறை
l வெண்ணெய், மல்லி தழை, சில்லி ப்ளெக்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
l ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் வெது வெதுப்பான நீர் சேர்த்து கிளறவும்.
l பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து விடவும். முழுதும் சேர்க்க வேண்டாம்.
l ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பிசைவதற்கு வசதியான இடத்திற்கு மாற்றி, 15 நிமிடங்கள் இழுத்துப் பிசையவும்.
l மாவின் மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி, மூடி போட்டு, மாவு உப்பி வரும் வரை, இரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
l மாவு இரு மடங்கு உப்பி வந்ததும், மீண்டும் எடுத்து ஒரு நிமிடத்திற்கு பிசைந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
l ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மாவு துாவி, வட்டங்களாக விரிக்கவும்.
l பொதுவாக ஓவனில் செய்யப்படும் இந்த துருக்கிரோல்கள், ஓவன் இல்லாதவர்கள், தோசை கல்லில் வைத்து கூட செய்யலாம். தோசை கல் சூடானதும், மீடியம் தீயில் வைத்து எண்ணெய் விடாமல், தேய்த்து வைத்துள்ள மாவை, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
l உப்பி வந்த ரொட்டியின் மேல் வெண்ணெய் மல்லித்தழை, சில்லி ப்ளெக்ஸ் கலந்த கலவையை தேய்க்கவும். மிகவும் மிருதுவாக இருக்கும். வாசனையாக இருக்கும். அவ்வளவு தான் துருக்கி ரோல்ஸ்கள் தயார்.

