தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்

வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்

வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை என்பதால், சிறுவனின் வாயை துணியால் கட்டி, கண்மூடித்தனமாக தாக்கிய மதரசா ஆசிரியர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்ச்சூர் மாவட்டத்தின், கவிதாளா கிராமத்தில் உள்ள மதரசாவில், அப்பாஸ், 35, என்பவர் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

இந்த மதரசாவில், ஒரு சிறுவன் நான்காம் வகுப்பு படிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன், ஆசிரியர் அப்பாஸ் கொடுத்திருந்த வீட்டுப்பாடத்தை, சிறுவன் முழுமையாக முடிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த ஆசிரியர் அப்பாஸ், சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கினார்.

சிறுவன் கத்தாமல் இருக்க, அவரது வாயை துணியால் கட்டிவிட்டு தாக்கியுள்ளார்.

இதில் சிறுவனின் கண்ணில், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும், கவிதாளா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார், மதரசாவுக்கு சென்று விசாரணையை துவக்கியுள்ளனர்.

சிறார்கள் தவறு செய்தால், அறிவுரை கூறி சரி செய்ய வேண்டுமே தவிர, கண் மூடித்தனமாக தாக்குவது சரியல்ல. இத்தகைய ஆசிரியரை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்து கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us