sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மேம்பாட்டு கமிட்டி தலைவருடன் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் அடிதடி

/

 மேம்பாட்டு கமிட்டி தலைவருடன் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் அடிதடி

 மேம்பாட்டு கமிட்டி தலைவருடன் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் அடிதடி

 மேம்பாட்டு கமிட்டி தலைவருடன் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் அடிதடி


ADDED : ஜன 15, 2026 07:15 AM

Google News

ADDED : ஜன 15, 2026 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி: அரசு தொடக்க பள்ளி வளாகத்தில், கவுரவ ஆசிரியரும், எஸ்.டி.எம்.சி., எனும் பள்ளி மேம்பாட்டு கமிட்டி தலைவரும், அடிதடியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.

ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகாவில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் திறக்கப்பட்ட மாதிரி தொடக்க பள்ளி உள்ளது. இதில் எஸ்.டி.எம்.சி., தலைவராக சதீஷ் போஸ்லேவும், கவுரவ ஆசிரியராக கன்டேர் என்பவரும் பணியாற்றுகின்றனர்.

இருவருக்கும் பள்ளி விஷயத்தில், பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவ்வப்போது இருவரும் வாக்குவாதம் செய்து கொள்வர்.

நேற்று காலை ஏதோ காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் துவங்கியது. அப்போது எஸ்.டி.எம்.சி., தலைவர் சதீஷ், கவுரவ ஆசிரியர் கன்டேரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ரவுடிகளை போன்று பாய்ந்து தாக்கி கொண்டனர்.

இதை கவனித்த சிலர், தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலை தளத்தில் வெளியிட்டனர். இது வேகமாக பரவியது. இதை, பலரும் கண்டித்தனர்.

'பள்ளி சிறார்களுக்கு பண்பாடுகளை போதிக்க வேண்டிய, மற்றவருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியரும், எஸ்.டி.எம்.சி.,யும் பொது இடத்தில், குறிப்பாக பள்ளி சிறார்களின் கண் முன்னால், பகிரங்கமாக சண்டை போட்டது சரியல்ல. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வித்துறையை வலியுறுத்தினர்.

'இந்த பள்ளி பெயரளவில் மட்டுமே, மாதிரி பள்ளியாக உள்ளது. குடிநீர், கழிப்பறை உட்பட, எந்த அடிப்படை வசதிகளும் சரியாக இல்லை. இதை சரி செய்வதில் ஆர்வம் காட்டாமல் சண்டை போடுவது சரியா' எனவும், கேள்வி எழுப்புகின்றனர்.






      Dinamalar
      Follow us