தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யானை தந்த விக்ரகங்களை விற்க முயன்ற இருவர் கைது

 யானை தந்த விக்ரகங்களை விற்க முயன்ற இருவர் கைது

 யானை தந்த விக்ரகங்களை விற்க முயன்ற இருவர் கைது


ADDED : ஜன 15, 2026 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, யானை தந்தத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு விக்ரகங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், ஜிகனி அருகில் சிலர் நேற்று காலை, யானை தந்தத்தால் தயாரிக்கப்பட்ட விக்ரகங்களை விற்க முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜிகனி போலீசார் உடனடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.

யானை தந்தத்தால் தயாரிக்கப்பட்ட கிருஷ்ணர், ராதா விக்ரகங்களை விற்க முயற்சித்த முகமது ஷபீர் அகமது, 50, நரேந்திர சர்மா, 45, ஆகியோரை கைது செய்தனர். இரண்டு விக்ரகங்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும். இருவரும் வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

யானை தந்தத்தால் தயாரிக்க ப்பட்ட விக்ரகங்களை வைத்திருப்பது, ச ட்டவிரோதமாகும். ஒருவேளை வைத்திருந்தால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் முகமது ஷபீர் அகமது, நரேந்திர சர்மா சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, விற்க முயற்சித்தனர். முகமது ஷபீர் அகமது, பெங்களூரின், பனசங்கரியில் வசிப்பவர். நரேந்திர சர்மா, சுதாமநகரில் வசிப்பவர்.

பறிமுதல் செய்யப்பட்ட ராதா, கி ருஷ்ணர் சிலைகள், பன்னரகட்டா தேசிய பூங்காவுக்கு அனுப்பப்பட்டன. இந்த விக்ரகங்கள் எத்தனை ஆண்டு பழமையான யானை தந்தத்தால் தயாரிக்கப்பட்டன என்பது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுள்ளனர். கைதான இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us