/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்
/
லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்
லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்
லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2025 06:48 AM

ஸ்ரீராமபுரம்: பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் செயலர் மதுசூதனபாபு, தலைமை ஆசிரியர் விஜய் குமார், ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரா, ஓய்வு பெற்ற ஆசிரியையர் நாகமணி, பஞ்சாட்சரி, ஜகதீஷ்வரி ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுக்கு மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறினர்.
பள்ளியின் செயலர் மதுசூதனபாபு பேசுகையில், “மஹாபாரதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு உபதேசம் வழங்கினார். அதை கேட்டு அர்ஜுனன் சிறப்பாக செயல்பட்டார்.
“இது போன்ற உபதேசங்களை ஆசிரியர், மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதை வைத்து மாணவர்களுக்கு ஆ சிரியர்கள் சிறப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும்,” என்றார்.