/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.வி.சி.கே., பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா
/
எஸ்.வி.சி.கே., பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா
ADDED : செப் 05, 2025 11:04 PM
தியாகராஜ நகர்: பெங்களூரு தியாகராஜ நகர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில் குமரன் பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.
தியாகராஜ நகரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில் குமரன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தமிழ், ஆங்கில வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படும்.
அதே போன்று, இந்தாண்டும் நடக்கிறது. இன்று காலை 10:30 முதல் 11:30 மணி வரை தமிழ் வழி; 11:45 முதல் மதியம் 1:00 மணி வரை ஆங்கில வழியில் நர்சரி முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை படிக்கும் மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பள்ளியின் கல்வி சங்க வளாகத்தில் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் லட்சுமிபதி, துணைத்தலைவி லீலா, இயக்குனர்கள் லோகேஷ், பாக்யலட்சுமி ஆகியோர் செய்துள்ளனர்.