அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினத்தை கொண்டாட உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினத்தை கொண்டாட உத்தரவு
ADDED : செப் 04, 2026 03:39 AM

பெங்களூரு: 'கர்நாடகாவின் அனைத்து பள்ளிகளிலும், நாளை ஆசிரியர் தினம் கொண்டாட வேண்டும்' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறி த்து, கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், கல்வி வல்லுநருமான ராதா கிருஷ்ணனுக்கு, செப்டம்பர் 5ம் தேதி பிறந்த நாளாகும். அவரை நினைவு கூரும்ம் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அவரை கவுரவிக்கும் வகையில், வரும் 5ம் தேதியன்று மதியம், மாவட்ட அளவில் அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்து, நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளன. நிகழ்ச்சியில் கல்வித்துறையில் சிறந்த சேவை செய்த ஆசிரியர்களை அடையாளம் கண்டு, மாவட்ட அளவில், நல்லாசிரியர் விருது வழங்கி, கவுரவிக்கப்படுவர்.
மாநிலம் முழுதும், ஒரே நேரத்தில் ஆசிரியர் தினத்தை, அர்த்தமுள்ளதாக கொண்டாடுவது, அரசின் நோக்கமாகும். அந்த வகையில், அனைத்து பள்ளிகளும், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை கொண்டாடுவது கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
