/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருடிய துப்பாக்கியுடன் 'செல்பி' குண்டு பாய்ந்து வாலிபர் காயம்
/
திருடிய துப்பாக்கியுடன் 'செல்பி' குண்டு பாய்ந்து வாலிபர் காயம்
திருடிய துப்பாக்கியுடன் 'செல்பி' குண்டு பாய்ந்து வாலிபர் காயம்
திருடிய துப்பாக்கியுடன் 'செல்பி' குண்டு பாய்ந்து வாலிபர் காயம்
ADDED : அக் 28, 2025 11:50 PM

கொப்பால்: திருடிய துப்பாக்கியுடன், 'செல்பி' எடுத்தபோது தவறுதலாக சுட்டதில் மார்பில் குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயமடைந்தார்.
கொப்பால் மாவட்டம், குக்கனுாரின் சிக்காபிடனல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த கவுடா பாட்டீல், 29. கடந்த 26ம் தேதி மது அருந்தியிருந்தார். அன்று வீட்டில் வைத்திருந்த, 'சிங்கிள் பேரல்' துப்பாக்கியுடன் 'செல்பி' எடுக்க முயன்றுள்ளார். போதையில் இருந்ததால், தவறுதலாக 'டிரிக்கரில்' விரல் பட்டு வெடித்தது. இதில், அவரின் வலதுபுற மார்பில் தோட்டா பாய்ந்தது.
சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, கொப்பால் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த குக்கனுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கவுடா பாட்டீலிடம் விசாரித்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் வைத்திருந்த துப்பாக்கி இவருடையது இல்லை என்பதும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, யாத்கிர் மாவட்டத்தில் இருந்து திருடி வந்ததும் தெரியவந்தது. துப்பாக்கியை திருடியது மட்டுமின்றி, சட்டவிரோதமாக வைத்திருந்ததாக, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

