/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாக்., பயங்கரவாத செயல்பாடு விவரிப்பு குழுவில் தேஜஸ்வி சூர்யா, பிரிஜேஷ்

ADDED : மே 18, 2025 11:17 PM

பெங்களூரு: பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, மத்திய அரசு அமைத்து உள்ள அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவில், கர்நாடகாவில் இருந்து பா.ஜ., - எம்.பி.,க்கள் தேஜஸ்வி சூர்யா, பிரிஜேஷ் சவுதா இடம் பிடித்து உள்ளனர்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக மத்திய அரசு குழு அமைத்து உள்ளது. அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொழும்பு நாடுகளுக்கு செல்லும் குழுவில் பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும்; ஸ்பெயின், ரஷ்யா, கிரீஸ், லட்வியா நாடுகளுக்கு செல்லும் குழுவில் தட்சிண கன்னடா பா.ஜ., - எம்.பி., பிரிஜேஷ் சவுதா இடம் பிடித்து உள்ளனர்.
இதுபற்றி பிரிஜேஷ் சவுதா கூறுகையில், ''உலக அளவில் பாகிஸ்தான் பயங்கரவாத செயல்பாடுகளை விவரிக்க, எனக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அனைத்து கட்சி குழுவில் உறுப்பினராக இருக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. முன்னாள் ராணுவ வீரர் என்ற முறையில், ஆப்பரேஷன் சிந்துார் குறித்து பெருமைப்படுகிறேன்,'' என்றார்.