வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஜி.பி.ஏ., மீது தேஜஸ்வி அதிருப்தி
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஜி.பி.ஏ., மீது தேஜஸ்வி அதிருப்தி
ADDED : மார் 17, 2026 06:12 AM

பெங்களூரு: வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சரிபார்க்க, வாக்காளர்களுக்கு, போர்ட்டல் வசதியை ஏற்படுத்தி கொடுக்காத ஜி.பி.ஏ., மீது, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது 'எக்ஸ்' வலைதள பதிவு:
ஜி.பி.ஏ.,வின் 5 மாநகராட்சிகளுக்கு நடக்க இருக்கும் தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சரிபார்க்க, வாக்காளர்களுக்கு, ஜி.பி.ஏ., போர்ட்டல் வசதியை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பது முரண்பாடாக உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் மூலம், வாக்காளர்கள் தங்கள் விபரங்களை சரிபார்க்க போர்ட்டல் வசதி அமைத்து கொடுத்து உள்ளது. ஜி.பி.ஏ.,வில் ஏன் சாத்தியம் இல்லை.
வாக்காளர்கள் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி ஏன். வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் சதி திட்டமா இது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருக்கு, இவ்வளவு மோசமான தொழில்நுட்ப அமைப்பு தேவையா?
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
