/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதமரிடம் மனைவியுடன் ஆசி பெற்ற தேஜஸ்வி சூர்யா
/
பிரதமரிடம் மனைவியுடன் ஆசி பெற்ற தேஜஸ்வி சூர்யா
ADDED : மார் 29, 2025 06:56 AM

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, 750 ஆண்டுகளுக்கு முந்தைய நுாலை பரிசளித்தார்.
பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. பிரபல பாடகி சிவஸ்ரீயை மணம் முடித்தார். தன் புது மனைவியுடன், டில்லிக்குச் சென்ற தேஜஸ்வி சூர்யா, பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.
இதுகுறித்த படத்தை, தன் 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து, தேஜஸ்வி சூர்யா வெளியிட்ட பதிவு:
எங்களை ஆசீர்வதித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே எங்களின் திருமண படங்களை பார்த்ததாக கூறியது, மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பிரதமரை சந்தித்த பொன்னான நேரத்தில், அவருக்கு மத்வாச்சார்யாவின் 750 ஆண்டு பழமையான 'சர்வ மூலம்' நுால் பரிசளிக்கப்பட்டது.
பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியில் உன்ன அரசு சாரா தொண்டு நிறுவனம், இந்த நுாலை பாதுகாத்துள்ளது. நுாலை பாதுகாத்த நடைமுறையை, ஒரு மாணவரை போன்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நம் முன்னோர்களின் அறிவு, கலாசாரத்தை காப்பாற்றி பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு 'ஞான பாரதி மிஷன்' திட்டம் வகுத்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது, பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- நமது நிருபர் -