/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வணிக வரித்துறை அதிகாரி மீது புகார் அளிக்க தொலைபேசி எண்
/
வணிக வரித்துறை அதிகாரி மீது புகார் அளிக்க தொலைபேசி எண்
வணிக வரித்துறை அதிகாரி மீது புகார் அளிக்க தொலைபேசி எண்
வணிக வரித்துறை அதிகாரி மீது புகார் அளிக்க தொலைபேசி எண்
ADDED : ஜூலை 19, 2025 11:20 PM
பெங்களூரு: லஞ்சம் கேட்கும் வணிக வரித்துறை அதிகாரிகள் மீது புகார் அளிக்க, தொலைபேசி எண்ணை வணிக வரித்துறை வெளியிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள பேக்கரி, காய்கறி, பால், சிகரெட் விற்பனை செய்யும் சிறு வணிகர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை கணக்கிட்டு வணிக வரித்துறை அதிகாரிகள் ஜி.எஸ்.டி., வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து, வணிகர்கள் தங்கள் கடைகளில் உள்ள கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்களை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களிடம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, யு.பி.ஐ., விவகாரத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் யாரெனும் லஞ்சம் கேட்டால், வணிகர்கள், '1800 425 6300' என்ற எண்ணுக்கு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை புகார் அளிக்கலாம்.