தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோவில் அர்ச்சகர் அடித்து கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

 கோவில் அர்ச்சகர் அடித்து கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

 கோவில் அர்ச்சகர் அடித்து கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது


ADDED : மார் 12, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: கால்வாயில் அர்ச்சகர் இறந்து கிடந்த சம்பவத்தில், திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவரை கள்ளக்காதலருடன் சேர்ந்து மனைவியே கொன்றதை, போலீசார் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக, மாண்டியா எஸ்.பி., சோபா ராணி, அளித்த பேட்டி:

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின், மாரளகாலா கிராமத்தில் வசித்தவர் சித்தலிங்கப்பா, 46. இவர் அர்ச்சகராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஷாலினி, 32. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மார்ச் 6ம் தேதியன்று, கே.ஷெட்டிஹள்ளி கணபதி கோவிலில் பூஜை செய்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய பின், ஸ்ரீரங்கப்பட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் அர்ச்சகரை தேடிய நிலையில், அதே கிராமத்தின் கால்வாய் அருகில் அவரது செருப்பு கிடந்தது. பக்கத்திலேயே ரத்தக்கறை சிதறியிருந்தது. அர்ச்சகர் அணிந்திருந்த ருத்ராட்சை மணி, ஸ்படிக மாலை அவற்றில் இருந்த டாலர்கள் விழுந்திருந்தன.

அவர் சென்ற பைக், கால்வாய்க்குள் விழுந்திருந்தது. அதன்பின் கால்வாயில் தேடிய போது, அர்ச்சகரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலை, முகத்தில் காயங்கள் இருந்தன. இவரை யாரோ அடித்து கொன்றிருக்கலாம் என, அவரது அண்ணன் பாலசுந்தர் புகார் அளித்தார். இதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, அர்ச்சகரின் மனைவியே கொலையாளி என்பது தெரிந்தது.

அர்ச்சகர் சித்தலிங்கப்பா, தன் அக்கா மகள் ஷாலினியை திருமணம் செய்திருந்தார். இவருக்கு அதே கிராமத்தில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஹரீஷ், 33, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர்கள் நெருக்கமாக இருந்ததை கண்ட அர்ச்சகர், மனைவியை கண்டித்தார்.

தங்களின் கள்ளத்தொடர்புக்கு அர்ச்சகர் தடையாக இருந்ததால், அவரை கொலை செய்ய ஷாலினி, ஹரிஷ் முற்பட்டனர். சம்பவத்தன்று கணவர் தனியாக செல்லும் தகவலை, ஹரீஷிடம் ஷாலினி கூறினார். ஹரீஷ், தன் கூட்டாளிகள் சந்தோஷ்குமார், 29, கணேஷ், 29, ஆகியோருடன் அர்ச்சகரை மடக்கி, உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து, உடலை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரிந்தது. ஷாலினி, ஹரீஷ், சந்தோஷ்குமார், கணேஷ் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us