/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹெப்பால் - சில்க் போர்டு இடையே சுரங்கப்பாதைக்கு விரைவில் டெண்டர்
/
ஹெப்பால் - சில்க் போர்டு இடையே சுரங்கப்பாதைக்கு விரைவில் டெண்டர்
ஹெப்பால் - சில்க் போர்டு இடையே சுரங்கப்பாதைக்கு விரைவில் டெண்டர்
ஹெப்பால் - சில்க் போர்டு இடையே சுரங்கப்பாதைக்கு விரைவில் டெண்டர்
ADDED : மே 06, 2025 05:41 AM

பெங்களூரு: ''பெங்களூரில் ஹெப்பாலில் இருந்து சில்க்போர்டு வரையிலான சுரங்கப்பாதைப் பணிக்கு, பெங்களூரு மாநகராட்சி 17,780 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று துணை முதல்வர் சிவகுமார், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின், சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 'மேற்கு - கிழக்கு; வடக்கு - தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் 60 கி.மீ.,க்கு சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
இத்திட்டத்துக்காக, 42,000 கோடி ரூபாயை, பெங்களூரு மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதில், ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு வரையிலான என்.ஹெச்., 7 சுரங்கப்பாதை அமைக்க, 17,780 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7, தேசிய நெடுஞ்சாலை 14 உடன் இணைக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற, மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிதியுதவி கோரப்பட்ட உள்ளது.
இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் சில தடைகள் உள்ளன. ராணுவ பகுதியில் வரும் நிலத்தை அவர்களிடம் கேட்டுள்ளோம். தனியார் நில உரிமையாளர்கள், மெட்ரோ நிர்வாகத்திடமும் சொத்துகளை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலமாட்டி அணையின் உயரத்தை, 517 மீட்டரில் இருந்து 524 மீட்டராக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான சட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இரண்டு நாட்களில் அறிக்கை கிடைத்துவிடும். அண்டை மாநிலங்களின் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாமல், இப்பணி தொடரும்.
புதுடில்லியில் நாளை நான்கு மாநிலங்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து எழுப்பப்படும்.
ராமர் குறித்து ராகுல் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. அவர் என்ன கூறினார் என்பதை பார்த்த பின் பதில் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.