தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஸ்மார்ட் இயந்திரங்கள்  வாங்க ரூ.40 கோடிக்கு டெண்டர்  

 ஸ்மார்ட் இயந்திரங்கள்  வாங்க ரூ.40 கோடிக்கு டெண்டர்  

 ஸ்மார்ட் இயந்திரங்கள்  வாங்க ரூ.40 கோடிக்கு டெண்டர்  


ADDED : மார் 22, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்களில் டிக்கெட் வழங்குவதற்கு யு.பி.ஐ., கட்டண வசதியுடன் கூடிய 11,000 ஸ்மார்ட் இ.டி.எம்., இயந்திரங்களை வாங்குவதற்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

பெங்களூரில் ஆயிரக்கணக்கிலான பி.எம்.டி.சி., பஸ்கள் இயங்குகின்றன. இவற்றில், ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணியர் பயணிக்கின்றனர். இந்த பஸ்களில் சில்லரை பிரச்னையை தீர்ப்பதற்காக யு.பி.ஐ., வசதிகள் உள்ளன. பயணியர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.

இதற்காக கியு.ஆர்., குறியீடு கொண்ட ஸ்கேனர்கள் பஸ்சில் ஒட்டப்பட்டு உள்ளன. இதை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி விட்டு டிக்கெட்டை பெற்று கொள்ளலாம்.

நடத்துநர்கள் டிக்கெட் வினியோகிக்க டிஜிட்டல் இயந்திரங்களையே பயன்படுத்துகின்றனர். தற்போது, நடைமுறையில் உள்ள இயந்திரங்கள் மெதுவாக வேலை செய்கின்றன. இதனால், ஒரே நேரத்தில் பலருக்கும் டிக்கெட் கொடுப்பது சவாலாக உள்ளது.

எனவே அதிநவீன, யு.பி.ஐ., வசதியுடன் கூடிய டிக்கெட் வழங்கும் ஸ்மார்ட் இ.டி.எம்., இயந்திரங்களை வாங்க பி.எம்.டி.சி., முடிவு செய்து உள்ளது. 11,000 ஸ்மார்ட் இ.டி.எம்., இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 40 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. டெண்டரை மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இயந்திரங்கள் வேகமாக பயணியருக்கு டிக்கெட் வழங்கும் தன்மையுடையது. இது, பி.எம்.டி.சி.,யின் டிஜிட்டல் மேம்பாட்டின் புதிய அத்தியாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us