/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொட்டகையில் பாம்பு புகுந்ததால் பதற்றம்
/
கொட்டகையில் பாம்பு புகுந்ததால் பதற்றம்
ADDED : அக் 04, 2025 11:08 PM
சாம்ராஜ்நகர்: வீட்டின் முன் இருந்த மாட்டுக் கொட்டகையில், பாம்பு புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், ஹொங்கள்ளி கிராமத்தில் வசிப்பவர் மகேஷ். இவரது வீட்டு முன் மாட்டுக் கொட்டகை அமைத்துள்ளார்.
நேற்று காலை மாடுகளுக்கு புல் போடுவதற்காக, மகேஷ் கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு பாம்பு புகுந்திருப்பதை கவனித்தார். அதிர்ச்சியடைந்த அவர், அக்கம், பக்கத்தினருக்கு தெரிவித்தார்.
அவர்களும் பாம்பு வல்லுநர் மகாதேவசாமிக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர், கொட்டகைக்குள் தேடியபோது, பிளாஸ்டிக் டிரம்முக்குள் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தார். அது டிரம்மில் இருந்து வெளியே வராமல், ஆட்டம் காட்டியது. நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தார். அது ஆறு அடி உள்ள நல்ல பாம்பாகும்.
இதை பிடித்து சென்ற மகாதேவசாமி, வனப்பகுதியில் விட்டு விட்டார்.