/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜீப் ரேசில் புகுந்த காட்டு யானை கேரள நபரை விரட்டியதால் பதற்றம்
/
ஜீப் ரேசில் புகுந்த காட்டு யானை கேரள நபரை விரட்டியதால் பதற்றம்
ஜீப் ரேசில் புகுந்த காட்டு யானை கேரள நபரை விரட்டியதால் பதற்றம்
ஜீப் ரேசில் புகுந்த காட்டு யானை கேரள நபரை விரட்டியதால் பதற்றம்
ADDED : ஏப் 15, 2025 06:52 AM
ஹாசன்: ஜீப் ரேசுக்கு வந்திருந்த கேரளாவை சேர்ந்த நபரை, காட்டு யானை விரட்டி சென்றதால், பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புரா தாலுகாவின் பெள்ளூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை, 'ஜீப் ரேஸ்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யானைகள் நடமாடும் இடத்திலேயே ரேஸ் நடந்தது. வெளி மாநிலத்தவரும் பங்கேற்றனர்.
ரேஸ் நடந்து கொண்டிருந்த போது, ஒற்றை காட்டு யானை அங்கு வந்தது. அங்கு நின்றிருந்த கேரள நபரை, தும்பிக்கையால் துாக்கி வீச முயற்சித்தது. ஆனால், அதன் பிடியில் சிக்காமல் அவர் தப்பி ஓடினார். யானை அவரை விரட்டி சென்றது.
இதை பார்த்த போட்டியாளர்கள், கூச்சலிட்டபடி ஜீப்பை, யானை அருகில் கொண்டு சென்றதால், அது பயந்து அங்கிருந்து சென்றது.
இந்த காட்சி வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. யானை தாக்குதலில் கேரள நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
வனப்பகுதியில் விதிமீறலாக ஜீப் ரேஸ் ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.