தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பயங்கர வெடிவிபத்து!

 பயங்கர வெடிவிபத்து!

 பயங்கர வெடிவிபத்து!


ADDED : செப் 30, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில்... நிலநடுக்கம் ஏற்பட்டது போல 4 கி.மீ.,க்கு அதிர்ந்த பூமி ஒருவர் பலி; படுகாயங்களுடன் 7 பேருக்கு சிகிச்சை

மங்களூரு, அக். 1- தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் உள்ள ரசாயன ஆலையில், நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், எட்டு தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். வெடிச்சத்தம், 4 கி.மீ., தொலைவில் உள்ள வீடுகளில், அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கம் தான் ஏற்பட்டதோ என எண்ணும் அளவுக்கு பூமியில் அதிர்ச்சி உணரப்பட்டது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் அருகில் கட்டிபல்லா என்ற இடத்தில், மங்களூர் ரீபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் உள்ளது.

இந்த தொழிற்சாலையில் கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், விமான எரிபொருள் மற்றும் பல பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்ப்படுகின்றன.

இந்த தொழிற்சாலையின் சி.எச்.டி., எனும் 'ஹைட்ரோ சல்பர்' சுத்திகரிப்பு பிரிவில், நேற்று காலை, 11:30 மணிக்கு முதல் ஷிப்டில் பணியாற்றிய தொழிலாளர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

அடுத்த 'ஷிப்ட ் ' பணியாற்றும் தொழிலாளர்கள் சிலரே வந்திருந்தனர். மதியம் 12:15 மணிக்கு பெரிய அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த பிரிவில் தீ பரவியது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், மணிஷ்கர்கரே என்பவர் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த எட்டு தொழிலாளர்களும் அங்கிருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், மணிஷ் இறந்து விட்டதாக, மாலையில் தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தர்ஷன், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி நர்வடே விநாயக், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதிர் குமார் ரெட்டி, எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இந்த விபத்தில், வெடிச்சத்தம் 8 முதல் 10 கி.மீ., தொலைவில் உள்ள ஜோக்கட்டே, பாஜ்பே, கானா, குலை ஆகிய பகுதிகளில் கேட்டு உள்ளது.

மேலும், ஜோக்கட்டே பஞ்சாயத்து கட்டடம், அங்குள்ள நுாலகத்தின் ஜன்னல்கள் நொறுங்கி உள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள பல வீடுகளின் ஜன்னல்கள் உடைந்துள்ளன. கதவுகள் சேதமடைந்ததுடன், சுவர் களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்து குறித்து உள்ளூர்வாசிகள் கூறியதாவது:

இந்த நிறுவனத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால், அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால், இவ்வளவு பெரிய வெடிப்பை நாங்கள் பார்த்ததில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, எல்லாம் சரியாக உள்ளது என்று கூறினரே தவிர, ஆபத்து இல்லை என்று கூறவில்லை.

எங்கள் வீடு, தொழிற்சாலையில் இருந்து, 4 கி.மீ.,யில் உள்ளது. அந்த தொழிற்சாலையால் பேரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய நிகழ்வுகளால் உள்ளூர் மக்கள் பாதிக்க கூடாது என்பதே எங்களின் விருப்பம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறுவனத்தின் மக்கள் தொடர் பு அதிகாரி டாக்டர் ருடால்ப் கூறியதாவது:

விபத்து நடந்த பிரிவில் பேட்டரிகள் தனிமைபடுத்தப்பட்டு உள்ளன. நிறுவனத்தின் அவசர கால மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள், தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் வளாகத் தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வரு கிறது.

இவ்வாறு கூறினார்.

வெடிப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கி உள்ளன. சுற்றுச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஒருவர் இறந்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. - பரத் ஷெட்டி எம்.எல்.ஏ., - பா.ஜ., சி.எச்.டி., பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் பீதியடைய வேண்டாம். - சுதீர் குமார் ரெட்டி நகர போலீஸ் கமிஷனர்


காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு

சட்ட விரோதமாக காஸ் சிலிண்டர் ரீ-பில்லிங் செய்யும் போது, நான்கு சிலிண்டர்கள் வெடித்ததால், பதற்றமான சூழ்நிலை உருவானது. பெங்களூரின் கக்கதாசபுராவின் ஆறாவது கிராசில் உள்ள பாழடைந்த இடத்தில் சிலர் சட்ட விரோதமாக காஸ் சிலிண்டர்களில் காஸ் நிரப்பி வந்தனர். வழக்கம் போல, நேற்று காலை, சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பும் போது, திடீரென நான்கு சிலிண்டர்கள் வெடித்து சிதறின. உடைந்த சிலிண்டரின் பகுதி, பாழடைந்த கட்டடத்தின் பக்கத்தில் இருந்த பள்ளியின் ஜன்னல் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த இடத்தில் உள்ள ஷெட்டில், சிலிண்டர்களில் காஸ் நிரப்பப்பட்டது. காஸ் சிலிண்டர் வெடித்ததில், ஷெட் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். பையப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us