ADDED : மே 15, 2026 03:48 AM

பெங்களூரு: மின் கசிவால் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.
பெ ங்களூரு நாயண்டஹள்ளியில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இங்கு பல ஆயிரம் கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. நேற்று காலை கிடங்கில் மின்கசிவு ஏற்பட்டது.
இது, தீயாக மாறி, உடனடியாக கிடங்கு முழுதும் பரவியது. தீயால், துர்நாற்றத் துடன் கூடிய புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் தீயணைப்பு துறையினர் வந்தனர்.
அவர்கள் நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
அதிர்ஷ்டவசமாக குடோனில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்தில், கிடங்கில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. பேட்ராயனபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.
'பிளாஸ்டிக் கிடங்கு, தமிழகத்தை சேர்ந்த குந்தன் என்பவருக்கு சொந்தமானது. இவரது மகன் அசோக் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக குந்தன், தமிழகம் சென்று உள்ளார். இச்சமயத்தில், அவரது குடோன் எரிந்து நாசமாகி உள்ளது.
