தங்கவயல் ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தங்கவயல் ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
ADDED : செப் 05, 2026 11:14 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூசைபாளையம் பகுதியின், ரவுடி அபிஷேக், 19, என்ற அபியை போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்து, கலபுரகி சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த அவர், காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி மீண்டும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஜாமின் பெற்ற பிறகும், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத் தின் கீழ் கைது செய்ய, நடவடிக்கை மேற்கொள்ள, கோலார் மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.
இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
