/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் செக் போஸ்ட் தங்கவயல் செக் போஸ்ட்
/
தங்கவயல் செக் போஸ்ட் தங்கவயல் செக் போஸ்ட்
ADDED : மார் 26, 2025 05:32 AM
கோல்டு சிட்டியில் ஆளுங்கட்சிக்காரங்க, வருஷத்துல ஒரு முறை மருத்துவ முகாம் நடத்துறாங்க. நல்ல சேவை தான். இதனை செய்வதை காட்டிலும் அரசின் அதிகாரம் உள்ளவங்க அரசு மருத்துவமனையிலேயே நிரந்தர மருத்துவ வசதியை ஏற்படுத்தலாமே.
கோல்டு சிட்டிக்கு தாலுகா அந்தஸ்து ஏற்படுத்தியும் கூட, அரசு மருத்துவமனைக்கான தாலுகா தகுதியை பெறவில்லையே. இதய பிரிவுக்கு மருத்துவ வசதியே இல்லை. இது அசெம்பிளி காரருக்கு தெரியுமா... தெரியாதா...?
'மாஜி' அசெம்பிளிக்காரர் கூட மாரடைப்புக்கு மருத்துவ சிகிச்சை இல்லாததால் தான், இறந்ததாவது ஞாபகம் இருக்குமா. கை காரங்க இலவச மருத்துவ முகாமை நடத்தினாங்க; இதய பிரிவுக்கு மருத்துவ வசதிக்கு என்ன செய்ய போறாங்களோ. கோல்டு சிட்டியில் மருத்துவ வசதி இல்லாமல் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேணுமோ?
கோலார் மாவட்டத்தில் ஒரு மருத்துவ கல்லுாரி அமைக்க போவதாக பட்ஜெட்டில் சி.எம்., அறிவிச்சாரு. இதை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் எங்கு ஏற்படுத்துவாங்க என்பது பலரோட எதிர்பார்ப்பு.
கோலாரில் ஒரே மருத்துவ கல்லுாரி, மாவட்ட தகுதியில் மருத்துவமனை இருக்குது. ஆனால் கோல்டு சிட்டியில் மருத்துவ வசதி இல்லாததால் 100 கி.மீ., துாரம் உள்ள நம்ம மாநில கேபிடல் சிட்டிக்கு போக வேண்டி உள்ளது.
புதுசா இண்டஸ்ட்ரியல் டவுன் ஷிப் வரப்போகுதுன்னு, கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லி வர்றாங்க. அதில் மருத்துவ கல்லுாரி வருமா அல்லது வேறு இடம் மாறுமா.
கோல்டு சிட்டியில் 35 வார்டுகளில் ஆண்டுக்கு 20 ஆயிரம் டன்னுக்கும் அதிமாகவே கிடங்கில் குப்பைகள் குவியுது. இதுல உரம் தயாரிக்க, அரசு பணத்தை பல கோடிகள் வாரி வழங்கினதாக விபரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க. 20 ஆண்டுகளாக தயாரித்த உரம் எவ்வளவு; விற்பனை செய்தது எவ்வளவு. இதுவரையில் வரவு - செலவு காட்டுற பட்ஜெட்டில் தெரிவித்ததாக தெரியல.
அண்மையில் தீப்பிடித்து எரிந்த குப்பைகள் மூலம் இழப்பு எவ்வளவு என தெரியல. குப்பை எரிந்ததில் பலவிதமான விமர்சனம் உள்ளது. தீயை பற்ற வைத்தது யாரு. முனிசி.,க்கு சம்பந்தப்பட்டவர்களே எரித்ததாக சொல்றாங்க. இதுகுறித்து விசாரணை நடத்தலயே.
வீடற்றவங்க தெருக்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம், பூங்காக்களில் படுக்காமல் தங்குவதற்காக ஆ.பேட்டை சமுதாய பவனை தயார் செய்தாங்க. கொரோனா நேரத்தில் 60 பேர் வரை தங்க வைத்து மூன்று வேளைக்கு சாப்பாடு கொடுத்தாங்க. பின்னர் படிப்படியாக குறைந்து 25 பேர் தங்கினாங்க. ஆனால், எட்டு மாதமா பூட்டியே வெச்சியிருக்காங்க.
இதனை பராமரித்து வந்த தொண்டு நிறுவனத்திற்கு 8 மாதமா ஒப்பந்தம் செய்த தொகையை வழங்காததால், 'அவங்க வேண்டாம் சாமி' என்று கை விட்டுட்டாங்களாம். தொண்டு நிறுவனம் நஷ்டமானதை வெளியில் சொல்ல தயங்குறாங்க. இன்னும் பில் பாஸ் ஆகலையாம். ஆனால் யாரோ கணக்கு காட்டி ஏப்பமிட்டாங்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.