ADDED : ஏப் 05, 2025 12:27 AM
நிதி தொகை கரையுமா?
கோல்டு சிட்டி முனிசி.,யில் 2024- - 25ல் நிதி என்னவோ தாராளமாக புரண்டது. அதனை செலவழிக்க தெரியாமல் 18 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியதை பெருமையா நினைக்கலாமா.
நடப்பு நிதியாண்டில் அதைவிட அதிகமாக மிச்சப்படுத்த போறாங்களாம். வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால் தானே, இருக்கும் தொகை கரையும். பணம் குறையாமல் வைத்திருக்கவா முனிசி., ஆபீஸ்.
ரா.பேட்டை தேசப்பிதா மார்க்கெட்டின் தெருக்களை சீரமைக்க வேணாமா. பஸ் நிலைய வணிக வளாக கடைகள் பூட்டி வைத்திருக்கவா பல லட்சங்கள் செலவழிச்சாங்க. இவைகள் மீது ஏன் பார்வை விழல.
சிட்டி டெவலப்மென்ட் வேலைகள் எதுவாக இருந்தாலும் அசெம்பிளி மேடம் ஒப்புதலுக்காக காத்திருக்கலாமா. சுதந்திரமாக செயல்படும் நாள் கோல்டு சிட்டிக்கு எப்போ வருமோ.
காக்கிகளுக்கு சவால்
திருட்டு நகைகளை வாங்கும் உள்ளூர் கிரிமினல்கள் பற்றி உள்ளூர் காக்கிகளுக்கு தெரியாமல் போனதா. இதுவரை உள்ளூர் காக்கிகள், ஏன் விழிப்பாக இல்லை.
அடிக்கடி திருட்டு பொருட்களை வாங்குவது, விற்பது உண்மையானால் இந்த பிசினஸ் நடப்பதை தடுக்கவில்லையே ஏன். வெளி மாநிலத்தவர் வந்து தான் ரெய்டு நடத்தணுமா. அப்பாவிகள் பாதிப்பதாக இருந்தால், மனித உரிமை அமைப்புகள் நியாயத்தை நிலை நாட்ட தயங்கலாமா. உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்துமா. இதுவும் இன்டர் ஸ்டேட் பிரச்னையாக இருக்குதே.
மோசமான கலாசாரம்
ஆந்திரா, தமிழகம் எல்லை பகுதியாக உள்ள கோல்டு சிட்டியில் 'கஞ்சா' நடமாட்டம் தாராளமாக புழக்கத்தில் இருக்குது; அதிலும் ஆ.பேட்டையில் இருந்து தான் அதிகமா டிஸ்ட்ரிபியூஷன் நடக்குதாம்.
ரா.பேட்டையில் சம்பந்தமே இல்லாத கும்பலின் பிசினஸ் நடக்குது. அந்த சட்ட விரோத கும்பல் ஒன்றுகூடி, சகலத்தையும் வளர்க்குது. இவங்களால, மோசமான கலாசாரம் தலையெடுப்பதாக தெரியுது.
அடங்கி கிடந்த சட்டவிரோத செயல்பாடுகள் மீண்டும் துளிர் விட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் பதற வைத்துள்ளது. காக்கிகள் என்ன தான் செய்றாங்களோ?
'மைனிங் லேண்ட் ஸ்வாஹா'
கோல்டு மைனிங் நிறுவனத்துக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் பேத்தமங்களாவில் இருந்தது. இதில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வீடுகளை மைனிங் கம்பெனிக்காரங்க அமைச்சாங்க.
இப்போது அந்த பழைய வரலாற்றை மூடி மறைக்கிறாங்க. கோல்டு சிட்டி பெயரை நீக்கியதில் வெற்றியும் கண்டிருக்காங்க. மாநில குடிநீர் வழங்கல் வாரியம் என பெயர் சூட்டியிருக்காங்க. இதனால் அந்த ஏரியும், குடிநீர் சுத்திகரிப்பு ஆலையும் கோல்டு மைன்சுக்கு சொந்தம் கொண்டாடாதபடி அதன் ஆதாரங்களை அழிக்க வேலைகள் நடத்தி வராங்க.
எல்லாமே கிராம பஞ்சாயத்து பட்டா புத்தகத்தில் அவர்களின் சொத்து என பதிவில் இருப்பதாக சொல்றாங்க. ஏற்கனவே கோல்டு சிட்டியின் வடக்கு பகுதியில், பல ஏக்கர் 'மைனிங் லேண்ட்'டை சிலர், ஸ்வாஹா செய்திருக்காங்க. இதனை மீட்டெடுக்க, சுரங்க அமைச்சகம் எப்போது விழிக்குமோ.

